தமிழகத்தில் மார்ச் மாதம் பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5-ம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அரசு தேர்வு துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் பொது தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதேபோன்று தனித் தேர்வர்களும் இன்று முதல் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக டிசம்பர் 17ஆம் தேதிக்கு கல்வி மாவட்ட வாரியாக அரசு சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.