மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இந்த மாதம் 6- ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு காலை 11 மணி முதல் 5 மணி வரை நேரில் சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.