தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியா?…. பள்ளிக்கல்வித்துறை திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அம்மாநில பள்ளிகல்வித்துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கட்டாயம் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. 1-9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது. இந்த தகவலை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் என பள்ளிகல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *