தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். ஆனால் களத்தில் இறங்கி போராடுபவர்களை சந்தித்த பிறகு தான் தெரிகிறது திமுக இன்னும் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்று, திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் இருக்கிறது.

இந்தக் கூட்டணி வருகிற 2026 ஆம் ஆண்டு வரை தொடருமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் கூட்டணி ஆட்சியில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் வீட்டில் தயாரிக்கப்படுகிறது. திமுகவின் ஆட்சியை வாடகைக்கு வாங்கும் ஆட்சியாக தான் பார்க்கிறேன். மழை பெய்தால் போட் பேருந்து என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கிறார்கள். டிசம்பர் மாதம் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு வெறும் வாடகை போட்டை எடுத்தால் மட்டும் போதாது. இது நிரந்தர தீர்வு கிடையாது. உதயநிதி ஸ்டாலின் நேற்று கூட எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று கூறிய நிலையில் இது வெறும் சினிமா டயலாக் தான். மேலும் விஜயின் மாநாடு பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.