தமிழகத்தில் முழு ஊரடங்கு….. ஒரே நாளில்…. லட்சக்கணக்கில் அபராதம் வசூல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் முகக்கவசம் அணியாத 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 1.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 589 பேர் மீது வழக்கு பதிவு செய்து 72,800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *