தமிழகத்தில் முழு ஊரடங்கு….? இன்னும் சில நாட்களில் கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரக்கூடிய சில நாட்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் முழு ஊரடங்கு வரப்போகிறது. இரவு நேர ஊரடங்கு வரப் போகிறது என்பது குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.