தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?….. முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை…..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், அமைச்சர், செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் இரவு ஊரடங்கு மேலும் 10 நாட்கள் நீட்டிப்பது, பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிப்பது, ஜல்லிக்கட்டு நடத்துவது மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *