செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்ற 17 வயது மாணவன் படித்து வந்தான். இந்நிலையில் மாணவன் கோகுல் ஸ்ரீ திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவன் கோகுல் ஸ்ரீ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, கோகுல் ஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில். தற்போது மீண்டும் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.