தமிழகத்தில் மீண்டும் கனமழை…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். எனவே கனமழையின்  காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *