தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?… கடும் கட்டுப்பாடுகள்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தலுக்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை இன்று வெளியாக வாய்ப்புள்ளது. அதில் தளர்வுகள் தொடருமா அல்லது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.