தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய வகை பால் அறிமுகம்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்…!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பச்சை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த பால் பாக்கெட்டுகள் அரசால் நிர்ணயிக்கப்படும் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 1-ஆம் தேதி முதல் COW MILK என்ற புதிய வகை பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த பாலில் கொழுப்பு விகிதம் 3.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். மேலும் இந்த பால் லிட்டருக்கு ரூ. 22.50 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.