சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு ‌ விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் விசிக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டுள்ளார். இவர் தற்போது விழாவில் பேசும்போது திமுகவை நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே தமிழ்நாட்டில் வாரிசு ஆட்சி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர் திமுகவை நேரடியாகவே விமர்சித்து மன்னராட்சி ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜகவை ‌ ஒழித்த நிலையில் இனி வரும் தேர்தலில் மன்னர் ஆட்சியையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆக ஆகக்கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு கேள்வி கேட்டால் சங்கி என்று அழைப்பதா என்று கூறினார். மேலும் திருமாவளவன் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருடைய மனது இங்கு தான் இருக்கிறது என்றார்.