தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 10 கல்லூரிகள்…. பெயர்கள் அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சட்டப்பேரவையில் இப்போது 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்த கல்லூரிகளைப்பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது, சென்னை கொளத்தூர், எவர் எக்ஸஸ் பிளாக்கில் அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பிளிக்கை என்ற இடத்தில் பழனி ஆண்டவர் மகளிர் கலைக்கல்லூரி என்ற பெயர்களில் 4 புதிய கல்லூரிகள் ஆரம்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பிகாம் பிபிஏ பிசிஏ பிஎஸ்சி.சிஎஸ் ஆகிய நான்கு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகின்ற 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *