தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. சற்றுமுன் அமைச்சரின் புதிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாது என்பதால் டிசம்பர் மாதத்திலிருந்து மாதிரித் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 55% பாடங்கள் குறைக்கப்பட்டு உள்ளது என்றும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *