தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் போட்டிகள்…. முதல்வர் சொன்ன மகிழ்ச்சியான செய்தி…!!!

தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் மூத்த தலைவர்களுடைய நினைவாக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவிஞர் தமிழ் ஒளி நினைவாக பள்ளி மாணவர்களுக்கு வருடம் தோறும் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்படும். மேலும் அதற்கான பரிசுகளும் வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் ஒளி பல்வேறு வகையிலும் தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர். சாதி வேறுபாடுகளை எதிர்த்தவர்.

இவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வரிடம் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா பிரிவினர் முக்கிய கோரிக்கைகளை வைத்தனர் இ.ந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக சிலை வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் 50 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக வைக்கப்பட்டு அதற்கான வட்டி தொகையிலிருந்து வருடம் தோறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி சார்பாக தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply