தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அதிகாரி….!!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

தன்னார்வலர்களின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பு ஊதியம் வழங்குதல் பி.எட் பட்டதாரிகள் பங்கேற்க அனுமதி, தொடக்கப் பள்ளி வகுப்பறை அமைத்தல், தொண்டு நிறுவனங்கள் தலையீடு தவிர்த்து மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் அளித்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவதையொட்டி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு முதல் 2 மாதங்கள் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பூஜ்ஜிய கலந்தாய்வு முடிவை கைவிட வேண்டும் என்றும், சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கூட்டத்தில் பேசியதாவது, கொரோனா ஊரடங்கின் காரணமாக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வட மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் ஆசிரியர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கட்டாய மாறுதல் இல்லை என்று அறிவித்திருப்பது ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 20 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களை நல்ல முறையில் ஆசிரியர்கள் வரவேற்க வேண்டும். அவர்கள் உளவியல் ரீதியாக தயார் செய்த பின்னர் பாடங்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *