தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் நான்கு நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களில் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் பொருத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தாத வாகனங்கள் மாணவர்களை ஏற்றுச் செல்ல அனுமதி இல்லை. ஜி பி ஆர் எஸ் கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவி பெட்டி, அவசரகால வழி மற்றும் மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.