தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்றும் வெள்ளத்தில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு விரைவில் புத்தகங்கள், வினா வங்கி மற்றும் தீர்வு புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாலையில் சிறப்பு வகுப்பு ஒரு மணி நேரம் கூடுதலாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.