தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு மருந்து வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 30 லட்சம் டோஸ் மருந்துக்கான தேவை உள்ளதாகவும், கடந்தாண்டு 18.38 லட்சம் டோஸ் மருந்து மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிமோனியா என்பது சுவாச நோய். வைரஸ்கள் , பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் நுரையீரலில் தொற்றுகள் நேரிடுகின்றன. நிமோனியா என்பது லேசான பாதிப்பாகவோ அல்லது சில நிகழ்வுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பெரிய பாதிப்பாகவோ இருக்கும்.  உலகசுகாதார நிறுவனத்தின் தகவலின் படி 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.