தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மது கடைகள் அனைத்தும் நாளை முழுமையாக அடக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்படும் மது கடைகள், கூடங்கள் மற்றும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.