தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் மற்றும் தேர்வு தொடர்பான பதற்றம் உள்ள மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை அழைத்து உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.