தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.