தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எத்தனை கோடிக்கு மது விற்பனையானது என்ற விபரம் வெளிவந்துள்ளது. எப்போதும் மதுரை தான் முதலிடம் பிடிக்கும் நிலையில் இந்த முறை சென்னை மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது 467 கோடியே 63 லட்சத்திற்கு மது விற்பனையானது. இந்த வருடம் அக்டோபர் 30ஆம் தேதி 202 கோடியே 59 லட்சத்திற்கும், தீபாவளியன்று அக்டோபர் 31ஆம் தேதி 235 கோடியே 94 லட்சத்திற்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக இரு நாட்களுக்கும் சேர்த்து 438 கோடியே 53 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை காட்டிலும் குறைவுதான். அதாவது கடந்த ஆண்டை விட 29 கோடியே 10 லட்சத்திற்கு மது விற்பனை குறைவாகத்தான் நடந்துள்ளது. மேலும் இதற்கும் தீபாவளி இந்த வருடம் முன்கூட்டியே வந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.