தமிழகத்தில் தபால் ஓட்டு…! 12 ,98, 406 பேர் இருக்காங்க…! கொரோனவால் அதிரடி முடிவு …!!

2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர்  பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் சுமார் 12 ,98, 406 நபர்கள் தபால் மூலம் தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளனர். மேலும் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலின் படி மக்களின் வயதை அடிப்படையாகக்கொண்டு  மொத்தம் 6,27, 74 ,446 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *