தமிழகத்தில் டிச., 14, 15, 16 ஆகிய 3 நாட்களில்….. இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு  அந்த வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது டிசம்பர் மாதம் 14, 15, 16 தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதில் 35 வயது முதல் 55 வயது வரை உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி அடுத்த வருடம் ஜூன் மாதம் கல்வி படிப்பை முடிப்பவர்கள் மற்றும் இளங்கலை முதுகலை பட்டதாரிகளில் 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள [email protected] என்ற இணையதளத்திற்கு செல்லவும்.