தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டர் வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாஸ்மாக் பார்கள் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது .

ஆனால் புதிதாக டெண்டர் வழங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.டாஸ்மாக் இடத்தை வழங்க நிர்ப்பந்திக்க கூடாது என உரிமைக்காரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.