தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக 1 முதல் 3ஆம் வகுப்பு வரை என்னும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அறிவதற்கு தமிழ்,ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வு என்னும் எழுத்தும் செயலி மூலமாக ஜூன் 21 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.