தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டது. ஆனால் வெப்பம் தந்து தற்போது பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

அதே சமயம் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜூன் 7 வெள்ளிக்கிழமை என்பதால், சனி மற்றும் ஞாயிறை விடுமுறை அளிக்க வேண்டும். இதனால் ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் தான் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.