தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு கொஞ்ச நாட்களே இருக்கும் சூழ்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பயிற்சியளிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணியானது தீவிரமாக நடைபெறுகிறது. காளைகளுக்கான தகுதிச் சான்று அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் நாட்டு இன காளையாக இருக்க வேண்டும். காளைக்கு 3 1/2 வயது நிரம்பி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.