தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி…..!! ஆனால் இந்த மாடுகள் மட்டும்…..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசின் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவை பின்வருமாறு, காளை உரிமையாளர், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அதே வேளையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காளைகள் அனைத்தும் கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை நாட்டு காளைகள் தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் சோர்வாக, நிதானமின்றி உள்ள காளைகளை அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக காளைகளுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அதுபோன்ற காளைகளை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். கால்நடை அவசர மருத்துவ ஊர்தி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய வேண்டும். மது போதையில் இருப்பவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது.ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து பார்வையாளர்களுக்கும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கும் இடையே 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும். என அரசு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *