தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு…. 38 மாவட்டங்களில் 144 பள்ளிகள் தேர்வு….!!!!!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா மூன்று பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல்,தலைமைத்துவம் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் பள்ளி கல்வி ஆணையராக வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் சிலை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.