மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு இருந்தது. ஆனால், அந்த தேர்தலில் தோல்வி அடைந்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதேபோல், பீகாரில் கடந்த ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.

இதேபோல் கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைந்து. அதற்கான தகவல்கள் இம்மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 9-ஆம் தேதி தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது.

தமிழகத்தில், மாநில அரசு மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறி வருகிறது. மேலும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.