தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர் பொன்முடி, மாநில முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்து 2022 ஆம் ஆண்டில் சுமார் 4.38 லட்சம் மாணவர்கள் சேர்ந்த நிலையில் இந்த வருடம் 5.33 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அறிவிப்பால் 2021 ஆம் ஆண்டில் சுமார் 7,886 பேரும், இந்த வருடம் சுமார் 8,771 பேரும் பயனடைந்துள்ளனர். வரும் கல்வியாண்டில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொழிபாடங்கள் விரிவாக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகம் சேராத பிரிவுகள் நீக்கப்படும். நிதிநிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்