தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா…. ஒரே நாளில் 23,443 பேருக்கு தொற்று உறுதி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 23,443 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பு 37,009- ஆக அதிகரித்துள்ளது. 13,551 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *