தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 786 பேர் பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 14,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இன்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 472 பேர் ஆண்கள், 312 பேர் பெண்கள், 2 திருநங்கைகள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 9,447 ஆண்கள் மற்றும் 5,301பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *