தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்?…. வலுக்கும் கோரிக்கை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்தை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப  பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம் செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம், வேலூர், சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எனினும் முக்கிய வழித் தடங்களில் போதியஅளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட கல்பாக்கம், மதுராந்தகம், ஓரிக்கை, செங்கல்பட்டு உள்பட பணிமனைகளில் பேருந்துகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும் பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டுநர், நடத்துநர் விடுப்பு எடுத்தாலும் மாற்று ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் காஞ்சிபுரம் போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்றவர்கள், அத்துடன் பணியில் இருக்கும் போது இறந்தவர்களின் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் உள்ளதால் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கவில்லை என தெரிவித்துள்ளார். அரசு இதுபற்றி ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக விரைவில் போக்குவரத்து துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.