மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி இந்த மாதம் முதல் தொடங்கியது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.