தமிழகத்தில் ஏப்-4 இரவு 7 மணிக்கு மேல் தடை – அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர்  நேரடியாக மக்களிடம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்ய தடை என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்களை தொகுதிகளை விட்டு வெளியேற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது. மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.