தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக் கூடாது. மின் இணைப்புகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.