தமிழகத்தில் உச்சகட்ட கொடூரம்…. 10 மாடுகள் உடல் நசுங்கி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் கனரக வாகனம் மோதியதில் நசுங்கி உயிரிழந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வண்டலுார்  வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் 10 பசு மாடுகள் உடல் நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தது.

இதையடுத்து இறந்த மாடுகளை அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து அகற்றினர். இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையில் சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அதிகாரிகள் கூறுவதற்கு இது போன்ற சம்பவமும் ஒரு காரணம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *