சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் பண்பாட்டு கலைகளை வளர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று முதல் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 4 நாட்கள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் 1500 கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் மற்றும் 2 உடைகள் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தற்போது அவர்களுக்கான ஒரு நாள் ஊதியத்தையும் அரசு 5000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.