தமிழகத்தில் விரைவில் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விரைவில் திருநங்கைகளும் மகளிர் உரிமைத் தொகையை பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக திருநங்கைகளை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் என அனைவருக்கும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.