தமிழகத்தில் இன்று முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவில் நேற்றுடன் வெப்பத்தின் அலை ஓய்ந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 29ஆம் தேதி வரை இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சென்னையை பொருத்தவரை வெப்பம் கடுமையாக உயரும். குறிப்பாக அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என எச்சரித்துள்ளது.

Leave a Reply