தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 ஆம் தேதி கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.