தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. முதல் 15 நாட்களுக்கு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று  முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்களுக்கு மன மகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குப் பிறகு அடுத்த 40 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கற்றல் அடைவுத் திறனை எட்டும்வரை புத்தாக்க பயிற்சி தொடங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *