தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று  மற்றும் நாளை  விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் சனிக்கிழமையும் விடுமுறை அளித்து உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் 4 நாட்களும் பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் இயங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *