தமிழகத்தில் இன்று முதல் 10th ஹால் டிக்கெட்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மார்ச் 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று  மார்ச் 27ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.