தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் நீட்டா பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற 10-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.