தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இரு வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் மழை பெய்து வரும் நிலையில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கியுள்ளார். மேலும் இதே போன்று இன்று புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.