தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமாரி, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கல்லக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

18ஆம் தேதி வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

19ஆம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

20 ஆம் தேதி தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *